மாற்றப்பட்டது தீர்மானம்:மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக!

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷானகவை தொடர தெரிவுக்குழு முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை அணையின் தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்க வேண்டாம் என பல்வேறு தரப்புக்களில் எதிர்ப்புகள் உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இருந்து நீக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

தசுன் ஷானக்க இன்று (20.09.2023) காலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அங்கு அவர் தலைமைத்துவத்தை விட்டு விலக விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது

Related Articles

Latest Articles