மீண்டும் எம்.பியாகிறார் முஜிபுர் ரஹ்மான்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்த டயனா கமகேவின் எம்.பி. பதவி உயர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகியுள்ள அந்தப் பதவிக்கு முன்னாள் எம்.பி. முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முஜிபுர் ரஹ்மான், உள்;ராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக அந்தப் பதவியை இராஜினாநாமா செய்திருந்தமை குறிப் பிடத்தக்கது.

Related Articles

Latest Articles