மீண்டும் போராட்டம்! நவம்பர் 2 நடக்கபோவது என்ன?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகக் கொழும்பில் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி மாபெரும் போராட்டம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் ஒன்றுகூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது அரசின் அடக்குமுறைகள் தொடர்பில் அனைவரும் கருத்துக்களை முன்வைத்தனர்.

அமைதி வழியில் போராடுவோர் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசி வலிந்து தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்று அவர்கள் குற்றம் சுமத்தினர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும், அவர்களைச் கொலை செய்ய அரசு சதித்திட்டம் தீட்டுகின்றது என்றும் மாணவர் அமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

அரசின் அடக்குமுறைகள் தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர் என்றும், போராட்டக் களத்தில் செய்திகளைச் சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களைப் பொலிஸ் அதிகாரிகள் பகிரங்கமாக எச்சரிக்கின்றனர் என்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் ரணில் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகக் கொழும்பில் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி மாபெரும் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles