கம்பளை நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பொலிஸாரும், சுகாதார அதிகாரிகளும் இணைந்து தொடர் கண்காணிப்பு, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு வலியுறுத்திவருவதுடன், முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறும் நபர்களை கைது செய்துவருகின்றனர். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது.
இன்றைய தினமும் கைதுகள் இடம்பெற்றன. முகக்கவசம் அணியாதவர்களை குண்டு கட்டாக தூக்கிச்சென்று கம்பளை பொலிஸார் கைது செய்தனர்.
கம்பளை நிருபர் – லாவண்யா










