புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
21 பேரடங்கிய அமைச்சரவை ஜனாதிபதியால் நேற்று நியமிக்கப்பட்டது. நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட அமைச்சுகள் ஜனாதிபதி வசம் உள்ளன. அந்தவகையில் மொத்த அமைச்சரவையின் எண்ணிக்கை 22 ஆகும்.










