அடுத்த பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரசித்திபெற்ற கலைஞர்கள் திட்டமிட்டுள்ளனர். இது சம்பந்தமாக பிரதான அரசியல் கட்சிகளுடன் அவர்கள் பேச்சு நடத்திவருகின்றனர் என தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் ஊடாகவே இவர்கள் தேர்தலில் களமிறங்க திட்டமிட்டுள்ளனர். இதன்படி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
நடிகை ஒருவரும் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.அதேபோல தொழில்சார் நிபுணர்கள் சிலரும், முன்னாள் படை அதிகாரிகளும் தேர்தலில் களமிறங்கவுள்ளனர். முன்னாள் இராணுவ தளபதி தயாரத்னாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடவுள்ளார்.
மறுபுறத்தில் தேசிய மக்கள் சக்தியிலும் பல பிரபல ங்கள் களமிறங்கவுள்ளன.










