முன்பள்ளி ஆசிரியை கொலை

 முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை, இலுக்வத்தை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று (07) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 25 வயதான யுவதியே இவ்வாறு கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பாலர் பாடசாலையில் நடைபெறவிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளையில் கினிஹேன மயானத்திற்கு அருகில் அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முன்பள்ளி ஆசிரியையின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து தரவுகளை பெற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியை கொலை தொடர்பில் கொலையாளி இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles