முரளிக்கு பதிலடி கொடுத்தார் மனோ!

“இலங்கை அணியில் போராடிய தன் சக நண்பர்கள் குமார் சங்ககார, மஹேல ஜயவர்தன ஆகியோருக்காக கூட வாய் திறக்காத முரளி, இப்போது விமல் வீரவன்சவுக்காக வாய் திறந்துள்ளார். வாழ்க!” -என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் விமல்வீரவன்ஸவை ஆதரித்து நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய முத்தையா முரளிதரன்,

” இவ்வளவு காலமும் இருந்த மனோ கணேசன் ஒன்றும் செய்யவில்லை. அவர் அவ்வாறு செய்யாவிட்டால் எதற்காக மீண்டும், மீண்டும் அவருக்கு வாக்களித்து ஏமாறவேண்டும்.” – என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,

” ஆம், முத்தையா முரளிதரன்! கொழும்பு உட்பட நாடு முழுக்க வாழும் தமிழருக்காக நான் “ஒன்றுமே செய்யவில்லை!”

ஆகவே கொழும்பில் வாழும் தமிழர்கள் எல்லோரும், இங்கே கொழும்பில் போட்டியிடும் “தலைவர்” விமல் வீரவன்சவுக்கே வாக்களிப்போம்!

அவர் தமக்கு தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்று சொன்னாலும்கூட, நாம் அவருக்கே வாக்களிப்போம்!

இலங்கை அணியில் போராடிய தன் சக நண்பர்கள் குமார் சங்ககார, மஹேல ஜயவர்தன ஆகியோருக்காக கூட வாய் திறக்காத முரளி, இப்போது விமல் வீரவன்சவுக்காக வாய் திறந்துள்ளார். வாழ்க!” – என்றார்.

Related Articles

Latest Articles