முறிந்து விழுந்தது மரக்கிளை – உடைந்து சரிந்தது மின்கம்பம்! இரு மணிநேரம் போக்குவரத்து தடை!!

நாவலப்பிட்டிய, தலவாக்கலை பிரதான வீதியில் இன்று பகல் மரக்கிளையும் மின்கம்பமும் உடைந்து வீழ்ந்ததால் அவ்வீதி ஊடான போக்குவரத்து சுமார் இரு மணிநேரம் தடைப்பட்டது. அத்துடன், மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
 
விடாது பெய்த அடை மழை காரணமாகவே நாவலப்பிட்டிய ஜயதிலக்க விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இருந்த மரக்கிளையும், மின்கம்பமும் இவ்வாறு உடைந்து விழுந்துள்ளன.
இதனையடுத்து மின்சார சபை ஊழியர்களும், போக்குவரத்து பொலிஸாரும் ஏனைய ஊழியர்களும் இணைந்து மரக்கிளையையும், மின்கம்பத்தையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
 
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ் 

Related Articles

Latest Articles