நாடாளுமன்றத்தை மே 15 ஆம் திகதிக்கு முன்னர் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பொன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போதும் மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
அரசமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் முடிவிலேயே ஜனாதிபதி இருக்கின்றார் எனவும் கூறப்படுகின்றது.
