மேலும் ஒரு நாடாளுமன்றச் செய்தியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிங்கள நாளிதழொன்றின் சபை நிருபருக்கே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.
அதேவேளை, ஆங்கில வார இதழொன்றின் நாடாளுமன்றச் செய்தியாளருக்கு இரு தினங்களுக்கு முன்னர் வைரஸ் தொற்று உறுதியானது.
இதனையடுத்து 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த ஊடகவியலாளர்களை சுய தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்நிலையிலேயே மேலும் ஒருவருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.