” மைத்திரிபால சிறிசேனவும், தயாசிறி ஜயசேகரவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்தவுக்கு சென்றவர்கள், அவ்விருவருமே சுதந்திரக்கட்சியை சீரழிக்கின்றனர்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க குற்றஞ்சாட்டினார்.
பண்டாரவளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். ஆனால் என்னை கட்சியை விட்டு நீக்க முடியாது. நான் கட்சியை விட்டு செல்லவும் மாட்டேன். நாங்கள் சுதந்திரக்கட்சி ஊடாக அரசியல் நடத்தியவர்கள்.
சுதந்திரக்கட்சியின் தற்போதை செயலாளர் தயாசிறி ஜயசேகர ஜி.எல். பீரிசுடன் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சென்று, 10 வருடங்கள் இருந்தவர். மைத்திரிபால சிறிசேனவும் சிறிகொத்தவுக்கு சென்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர். அவர்கள் இருவருமே கட்சியின் வளர்ச்சியை தடுக்கின்றனர்.” – எனவும் அவர் கூறினார்.










