ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய இலங்கை சுதந்திரக் கட்சியில் (நவ லங்கா நிசாத் பக்சய) (NLFP) இணையத் தீர்மானித்துள்ளார்.
“ எனது இராஜினாமாக் கடிதம் கட்சிக்கு அனுப்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியின் தற்போதைய கொள்கை சரியில்லை. சரியான நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” – என்று ஜீவன் குமார துங்க குறிப்பிட்டுள்ளார்.
