மொட்டு கட்சி ஆதரவு வழங்கினால் பஸில் பிரதமர்!

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளித்தால் பஸில் ராஜபக்சவை பிரதமராக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் உறுதியளித்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மொட்டு கட்சியின் ஆதரவை பெறுவதற்கு ஜனாதிபதி முற்பட்டுவருகின்றார். அதற்காக அக்கட்சியை திருப்திபடுத்துவதற்காக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. பஸில் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை தருகின்றேன், எனக்கு ஆதரவு தாருங்கள் என்பதுதான் புதிய முன்மொழிவாக உள்ளது.

பஸில் ராஜபக்ச மக்களால் விரட்டப்பட்டவர், எனினும் மொட்டு கட்சிக்குள் அவருக்கே செல்வாக்கு உள்ளது. மஹிந்த ராஜபக்ச செல்லாக்காசாகிவருகின்றார். இது ரணிலுக்கும் தெரியும், அதனால்தான் பஸில் ராஜபக்சவை குறிவைத்துள்ளார்.

முதலில் பிரதமர் பதவியை தருகின்றேன், எனக்கு பின்னர் நீங்கள் ஜனாதிபதியாக வரலாம், ஆதரவு தாருங்கள் என்பதே ரணிலின் கோரிக்கை. எது எப்படி இருந்தாலும் ரணிலால் வெற்றிபெறமுடியாது. ஏனெனில் அவரின் ஜாதக கட்டமைப்பு அவ்வாறுதான் உள்ளது.

தேர்தலை பிற்போடும் ஜனாதிபதியின் எந்த முயற்சியும் எடுபடாது. அதற்கு நாடாளுமன்றத்தின் ஆதரவும் கிட்டாது” – என்றார்.

மறுப்பு

எனினும், இந்த தகவலை இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி நிராகரித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பற்ற விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் எனவும், பஸில் பதவி எதையும் கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles