மொட்டு கட்சி மாநாட்டுக்கு பாஜக தலைவர் அமித் ஷாவை அழைக்க திட்டம்!

இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவரான அமித் ஷாவை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநாட்டுக்கு அழைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டமொன்று, பஸில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு முன்னர் நடைபெற்றது.

கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு, கட்சி மாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அப்போது, மொட்டு கட்சியின் மாநாட்டுக்கு, பாரதிய ஜனதாக் கட்சி தலைவரை அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சி முன்னெடுக்கப்படும் என பஸில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும், அமித் ஷாவின் வருகை தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

Related Articles

Latest Articles