மொட்டு கட்சி விடாப்பிடி! புதிய அமைச்சரவை நியமனத்தில் இழுபறி!

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
புதிய 12 அமைச்சர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் 11 பேரின் பெயர் அடங்கிய பட்டியலை மொட்டு கட்சி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
அந்த பெயர் பட்டியலில் இருந்த இருவருக்கு உடனடியாக அமைச்சு பதவி வழங்க முடியாது எனவும், அவ்வாறு வழங்கினால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை உருவாகும் எனவும் ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவ்விருவருக்கும் அமைச்சு பதவி கட்டாயம் வேண்டும் என மொட்டு கட்சி அறிவித்துள்ளது. இதனால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles