மொட்டு கட்சியின் ஆதரவு ரணிலுக்கு? அறிவிப்பு எப்போது வெளிவரும்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் ஜுலை நடுப்பகுதியிலேயே பெயரிடப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் அரச தரப்பு வேட்பாளர் ஆகியோரே அம்மூவர். அரச தரப்பில் இரு வேட்பாளர்கள் களமிறங்கமாட்டார்கள் என்பதுதான் எமது நிலைப்பாடு.

எனவே, இந்த மும்முனைப்போட்டியில் எமது தரப்பே வெல்லும் என்பது உறுதி. வடக்கு மற்றும் தெற்கில் உள்ள சிறு கட்சிகள் இவர்களில் ஒருவரை ஆதரிக்கக்கூடும்.

ஜனாதிபதி தேர்தலில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறுவதில் கட்சிகளுக்கு நெருக்கடி நிலை ஏற்படாது. ஜுலை நடுப்பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும்.”- என்றார்.

Related Articles

Latest Articles