” ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தலான விடயங்களுக்கு தமது கட்சி ஆதரவு வழங்குமானால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன்.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சூளுரைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில்தான் இன்னும் இருக்கின்றேன். செயநன்றி கடனுக்காக கட்சியில் தொடர்கின்றேன். மொட்டு கட்சிதான் வேட்பு மனு வழங்கியது. கொழும்பு மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்றேன். தேசிய ரீதியில் இடண்டாம் இடத்தை பிடித்தேன். கட்சி வீழ்ந்திருக்கும் நேரத்தில் அதை விட்டுவிட்டு செல்வது நல்லதல்ல.
எனினும், நாட்டை பிளவுபடுத்தும், இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதேபோல ஒற்றையாட்சிக்கு எதிரான விடயங்களுக்கு கட்சி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு வழங்கினால் அதன் பின்னர் அங்கு இருக்கமாட்டேன்.” – என்றார்.
