‘மொட்டு கட்சியை ஆட்டம் காண வைக்க இன்னும் 10 எம்.பிக்களே தேவை’

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முதலாவது அரசியல் அஸ்திரம் உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது ஏவப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சூளுரைத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு கொழும்பு, பௌரை – கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” எமது அணியில் சிறந்த தலைவர் இருக்கிறார். இணைந்து பணியாற்றக்கூடிய உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, எமது பயணம் தொடரும். நாட்டு மக்கள் எமது பக்கமே நிற்கின்றனர். அடுத்து நடைபெறும் தேர்தலில் இது தெரியவரும்.

உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான அறைகூவலை தேர்தல் ஆணைக்குழு விடுக்க வேண்டும். அதற்கான காலம் வந்துவிட்டது. இந்த ஆட்சி நிச்சயம் கவிழ்க்கப்படும். ஆரம்பத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக 134 வாக்குகள் நாடாளுமன்றத்தில் இருந்தது. அது தற்போது 123 ஆக குறைவடைந்துள்ளது. இன்னும் 10 வாக்குகளை குறைத்தால் ஆட்டம் காண வேண்டிவரும். எதிரணிகளுடன் இணைந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி சபைத் தேர்தலில் இதற்கான அடித்தளம் இடப்படும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles