மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளின் கல்லறைகள் சுத்தப்படுத்தப்பட்டன

மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளான பொகவந்தலாவ , கொட்டியாக்கலை தோட்டத்தில் பிறந்த முத்து ஐயாவு, அந்தோனி பிரான்ஸிஸ் ஆகியோரின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதி காடாக காட்சியளித்த நிலையில், அவற்றை சுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இதொகா பிரமுகருமான ரவி குழந்தைவேலுவால் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொட்டியாகலை தோட்டத்திலேயே குறித்த தியாகிகளின் உடலங்கள் பு(வி)தைக்கப்பட்ட இடத்தில் கல்லறை காணப்படுகின்றது.
கல்லறை பகுதி காடாகும் அபாயம் உள்ளது. தற்போது அவர்களை எவரும் நினைவுகூராத நிலையும் காணப்படுகின்றது.

பொகவந்தலாவை பகுதியில் பல சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் இருந்தும், மலையக தியாகிகளின் நினைவிடங்கள், இவ்வாறு ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இவர்கள் உயிர் தியாகம் செய்து கடந்த 02 ஆம் திகதியுடன் 66 வருடங்கள் கடந்தாலும், அன்றைய தினத்தில்கூட எவ்வித செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் மலையக குருவி சுட்டிக்காட்டி இருந்தது.
இந்நிலையில் கல்லறைகளை சுத்தப்படுத்தி, தியாகிகளுக்கு ரவி குழந்தைவேலு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles