யாழில் 17 சபைகளையும் என்பிபி கைப்பற்றும்!

” தமிழ்க் கட்சிகளுக்குத் தற்போது தோல்விப் பயம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் எமக்கு எதிராகப் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.

யாழ். சாவகச்சேரியில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“கடந்த தேர்தல்கள் போன்று இம்முறையும் தேசிய மக்கள் சக்திக்கே தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்குவார்கள். குறிப்பாக யாழ். மாநகர சபை உட்பட 17 சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும்.” எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதனால் தமிழ்க் கட்சிகள் பலவும் பயத்தில் கலக்கமடைந்து எம்மைத் தொடர்ந்தும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். அதிலும் தாம் தேர்தலில் வெல்லாவிட்டாலும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதற்குப் போலிப் பிரச்சாரங்களை அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று பலரையும் இணைத்து விடுதலைப்புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். ஆனால், இந்தக் கூட்டமைப்புப் புலிகளுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்திருக்கின்றது.

இவ்வாறான நிலைமையில்தான் எமக்கான ஆதரவை மக்கள் வழங்க முன்வந்துள்ள நிலையில் அதனைக் குழப்ப சதி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும், சதி நடவடிக்கைகள், போலிப் பிரச்சாரங்கள், விமர்சனங்கள் எல்லாம் திட்டமிட்ட வகையில் எமக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டாலும் எமது மக்கள் மிகத் தெளிவாக எமக்கான ஆதரவை வழங்குவார்கள்.” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles