யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

யாழ். நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், அராலி – வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களின் செலுத்துநர்களும் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றைய நபர் வைத்தியசாலையிலும் சாவடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles