யாழில் சுதந்திர தினத்தையொட்டிய கலாசார விழா

75 ஆவது தேசிய சுதந்திரதினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு , மாபெரும் இசை கச்சேரியுடன் கூடிய “யாழ்ப்பாணம் மாவட்ட கலாசார விழா” நேற்று (11) இரவு யாழ்.கோட்டைக்கு அருகிலுள்ள முற்றவெளி திறந்வெளி அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

வடமாகாண தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் கலாசார விழாவில் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்ததோடு, இறுதியில் மாபெரும் இசை கச்சேரியும் நடைபெற்றது.

இதில் பெருந்திரளான யாழ்ப்பாண மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த இசை நிகழ்ச்சியில் தென்னிந்திய கலைஞர்கள் பலர் கலந்து கொண்டது விசேட அம்சமாகும்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரதானிகள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று (11) பிற்பகல் யாழ் கலாசார நிலையத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் சுதந்திர தின ஊர்வலம் நடைபெற்றது.

மேலும் இந்த ஊர்வலத்தில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த பல்வேறு நடன அம்சங்கள் இணைக்கப்பட்டிருந்ததுடன் வடமாகாண பாடசாலை மாணவ மாணவிகளும் இதில் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
12-02- 2023

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles