யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்பு

அரச தைப்பொங்கல்  விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்  இன்று (15) காலை யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாராதிபதி வணக்கத்துக்குரிய மீகஹஜந்துரே சிரிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்த  ஜனாதிபதி , அவரின் உடல் நலன் குறித்தும் கேட்டறிந்ததோடு சிறிது நேரம் அவருடன்  உரையாற்றினார்.அதனை தொடர்ந்து நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரால்  செத்பிரித்  பாராயணம் செய்து  ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டது.

“பௌத்த இந்து சமய மன்றம்” சார்பில் ஜனாதிபதியை அதன் தலைவர் கலாநிதி எம்.மோகன் வரவேற்றார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் , நல்லை ஆதீன  முதல்வர்   ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமியை  சந்தித்து ஆசி பெற்றார்.

அடுத்து யாழ் ஆயர்  இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி , யாழ்.ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம்  ஆண்டகை அவர்களை சந்தித்து  சிறிது நேரம் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles