ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 140 வாக்குகள் கிடைக்கப்பெறும் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன நம்பிக்கை வெளியிட்டார்.
காலியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.
” இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும். அதில் ரணில் வெற்றுபெறுவார். இறுதியில் அனைவரும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்து ரணிலை ஆதரிக்கும்நிலைகூட உருவாகலாம்.
50 வருடகால அரசியல் அனுபவம் உள்ள தலைவரே ரணில் விக்கிரமசிங்க. அவர் ஜனாதிபதியானால் இலங்கையை உலக அளவில் நல்ல இடத்துக்கு கொண்டுவருவார்.” – என்றும் அவர் கூறினார்.










