ரணிலை ஆதரிக்குமா மொட்டு கட்சி? ஜுன் நடுப்பகுதியிலேயே அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் ஜுன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மொட்டு கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதா அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா என்பது தொடர்பில் மொட்டு கட்சிக்குள் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது.

மே தினக் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டு மொட்டு கட்சி, அடுத்தவாரம் முதல் தொகுதிக்கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.

தொகுதி கூட்டங்களின்போது கட்சி ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்களிடம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துகள், யோசனைகள் பெறப்படவுள்ளன.
இந்த கருத்துகளை அப்படையாகக்கொண்டே மொட்டு கட்சியின் முடிவு அமையும் என அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles