ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாட்டை முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய மேற்கொண்டுள்ளார். மாலை 3 மணியளவில் நடைபெறும் இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் இதர கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அரசுக்கு எதிராக பரந்தபட்ட கூட்டணியை அமைத்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படும் என தெரியவருகின்றது.










