ரணில், சஜித் விரைவில் நேரடி பேச்சு: 10 ஆம் திகதிக்குள் இறுதி முடிவு!

ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் வெகுவிரைவில் பேச்சு நடத்துவார்கள் எனவும், பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள் இணக்கத்துக்கு வராவிட்டால் தனிவழி செல்ல நேரிடும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன பொதுசின்னத்தின்கீழ் ஒன்றிணையலாம். அப்போது பிரச்சினைகள் ஏற்படாது. இரு கட்சிகளிலும் தலைவர்கள் இருக்கலாம். இணக்கத்துடன் செயற்படக்கூடிய செயலாளரை நியமித்தால் பிரச்சினை தீர்ந்துவிடும்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்தால் 40 லட்சம்வரையான வாக்குகளைப் பெற முடியும். இரு தரப்பும் இணையாததால் கடந்த தேர்தல்களில் சுமார் 20 லட்சம்வரையான வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.

மொட்டு கட்சியின் வாக்குகள்தான் ஜே.வி.பி. வசம் சென்றுள்ளது.
இரு தலைவர்களும் (சஜித், ரணில்) விரைவில் பேச்சு நடத்துவார்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிவரை வாய்ப்பு உள்ளது. அதற்குள் இணக்கம் இல்லாவிட்டால் மீண்டும் தனித்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles