ரணில் நடிகர் மட்டுமே – ராஜபக்ச குடும்பம்தான் தயாரிப்பு! நாடகத்தை அம்பலப்படுத்தும் மனோ!!

ராஜபக்ச அணியினர் கொள்ளையடித்த பணத்தை தேடிக்கண்டு பிடித்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முதலில் செய்வதற்கு தயாராக வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிற்கு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

” இந்த நாட்டில் வருமான வரி பற்றி கருத்துக்களை முன்வைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களால் கொள்ளையடித்து களவாடப்பட்ட பணம் உகண்டாவிலா, துபாயிலா, சிங்கப்புரிலா, ஐரோப்பாவிலா இருக்கின்றது என்பதனை தேடி கண்டு பிடித்து இலங்கைக்கு கொண்டு வரவதுடன் கொள்ளையடித்தவர்களுக்கு தண்டனையையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க வெறும் நடிகர் மட்டும்தான் மற்ற ஏனைய திரைக்கதை, வசனம், தயாரிப்பு அனைத்துமே ராஜபக்ச குடும்பமே.

மக்கள் ஆணையை பெற்ற நாடாளுமன்றத்தினை தேர்தல் வாயிலாக கொண்டு வந்து மக்களுக்கான சிறந்த ஆட்சியினை நடத்த அந்த அரசாங்கம் முன்வரவேண்டும்.

ஒரு லட்சம் வருமானம் பெறுபவர்கள் வரி கட்ட வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அந்த முடிவை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.” – எனவும் மனோ குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles