“ரணில் விக்கிரமசிங்கவே சிறந்த தலைவர். அவரின் தலைமைத்துவத்தின்கீழ்தான் சஜித் பிரேமதாச இணைய வேண்டும்.” – என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் ஏற்பட்டதுபோன்ற அராஜக நிலை இலங்கையில் ஏற்படாமல் தடுத்த தலைவர்தான் ரணில் விக்கிரமசிங்க. அவர் சவால்களுக்கு மத்தியில்தான் ஜனாதிபதி பதவியை ஏற்றார். அவரின் தலைமைத்துவம்தான் சிறந்தது. அந்த தலைவரின் கீழ்தான் சஜித் இணைய வேண்டும். வேறு தலைவர்கள் இங்கு கிடையாது.” – என்றார்.










