பதுளை – கொழும்பு ரயிலில் இருந்து பிரான்ஸ் நாட்டு பெண்மணியொருவர் கீழே விழுந்து, ஆபத்தான நிலையில், தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.



இவ்விபத்து ஒகியவிற்கும் இதல்கஸ்ஹின்னவிற்கும் இடைப்பட்ட பகுதிலேயே நேற்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலேயே, மேற்படி பிரான்ஸ் நாட்டுப் பெண் மிதி பலகையூடாக கீழே விழுந்துள்ளார். மேலும், இப் பெண்ணை காப்பாற்ற முயன்றவரும் இரயிலிலிருந்து கீழே விழுந்துள்ளார். இவரும் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
