கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பலியாகியுள்ளார்.
பதுளை, எல்லே நோக்கி பயணித்த அவர், பட்டிப்பொல ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்தே நேற்று பிற்பகல் தவறி கீழே வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார். அவர் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
மொஹமட் அப்துல் ஹமிட் (32) என்ற எகிப்து நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
