பொல்காவெல ரயில் நிலையத்துக்கு அருகே, கடந்த 6 ஆம் திகதி இரவு கண் பார்வையற்ற இளைஞனுக்கு அறிமுகமான நபரொருவர், தேநீர் அருந்தவென அழைத்துச் சென்று அவரிடமிருந்த 6000 ரூபாவை பறித்துக் கொண்டு – அவரது மலவாயிலில் மின் குமிழ் ஒன்றை செலுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கேகாலை அரச வைத்தியசாலையில் இந்த மின் குமிழ் அகற்றப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
களனிய பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான திருமணமாகாத கண் பார்வையற்றவரே இவ்வாறு கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவராவர். பிறப்பிலேயே இந்த இளைஞருக்கு பார்வை இருக்கவில்லையென்றும் இவர் நீண்ட காலமாக கொழும்பு – அனுராதபுரம், கொழும்பு – பதுளை ரயில்களில் ஏறி பாடல்களை பாடி பணம் சேகரிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக் கொள்ளை தொடர்பாக கேகாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










