ரஷ்ய – உக்ரைன் போர் – உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்த போகும் தாக்கம்…

உலக அளவில் ரஷியா கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு பயன்பாட்டில் 40 சதவீதம் ரஷியாவிலிருந்து அனுப்பப்படுகிறது.

இப்போதைய சூழலில் பொருளாதார தடைகள் ரஷியா மீது போடப்பட்டுள்ளதால் எரிவாயு கொண்டு செல்வது தடைபடும்.ஐரோப்பிய யூனியனுக்கு நார்டு ஸ்ட்ரீம்-2 குழாய்கள் வழியாக பால்டிக் கடற்பகுதி வாயிலாக எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. சமீபத்திய நெருக்கடிகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தடை நடவடிக்கைகளால் இந்த சேவை பாதிக்கப்படும்

எண்ணெய் விலை 100 அமெரிக்க டாலர்களை தாண்டி சென்றுள்ளது. இந்த விலையேற்றம் இன்னும் அதிகரிகக்கூடும் என தெரிகிறது. உலக அரங்கில் கச்சா எண்ணெய் விலை 150 அமெரிக்க டாலர்களை கடந்து செல்ல வாய்ப்புள்ளது.

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். ஆசிய அமெரிக்க, உலக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்திக்கும்.

உணவு களஞ்சியமாக இருக்கும் உக்ரைன், உலக அளவில் சோளம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் 5 இடங்களுக்குள் உள்ளது.போர் தொடங்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து ஏற்றுமாதியாகும் பொருட்களின் சேவை பாதிப்படையும். இதனால் சமையல் எண்ணெய், கால்நடை தீவனம், சோயாபீன் போன்ற பொருட்களின் விலை கடுமையாக உயரும்.

கோதுமை விலை உயர்வு

உலக அளவில் கோதுமை ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடு ரஷியா. உக்ரைனும் கோதுமை ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், தற்போதைய சூழலில் கோதுமை ஏற்றுமதி அதிகம் பாதிக்கப்படும். உலகின் கோதுமை தேவையை பூர்த்தி செய்வதில் 29 சதவீதம் இவ்விரு நாடுகளில் இருந்து செல்கிறது. இதன்காரணமாக அங்கிருந்து கோதுமை இறக்குமதி செய்யும் எகிப்து, வங்காளதேசம், துருக்கி போன்ற நாடுகளில் விலையேற்றம் அடையும். இதனால் பிரட், மாவுப்பொருட்கள், பாஸ்தா மற்றும் இதர கோதுமை பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மொபைல் போன்கள் உற்பத்திக்கு பயன்படும் பெல்லேடியம் ஏற்றுமதியில் மிகப்பெரிய நாடாக ரஷியா திகழ்கிறது. இந்த உலோகம் வாகன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது, பல் மருத்துவ துறை, நகை செய்யும் இடங்கள் மற்றும் இன்னும் பல முக்கிய தொழில் துறைகளில் பயன்படுகிறது. போர் காரணமாக இந்த வ்லோக ஏற்ற்மதி பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்பதால் இந்த துறை சம்பந்தப்பட்ட பொருட்களின் விலை ஏறம் அடையும்.

Related Articles

Latest Articles