எதிர்வரும் மே 9 ஆம் திகதி நடைபெறவுள்ள ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
1941 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற இரண்டாவது உலக போரின்போது ஜேர்மனியும் அப்போதைய சோவியத் யூனியனும் கடுமையாக மோதிக் கொண்டன.
பின்னர் 1945-ம் ஆண்டு சோவியத் யூனியன் தாக்குதலை சமாளிக்க முடியாத ஜேர்மன் நாஜி படைகள் சரணடைந்தன.
இதன் 80-வது ஆண்டு தின விழாவை அடுத்த மாதம் 9-ம் திகதி பிரம்மாண்டமாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
இந்த வெற்றி தின விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ தெரிவித்தார்.
பிரதமர் மோடி பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.