ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை நியூசிலாந்து இராணுவ சிப்பாயொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிந்தது.
நியூசிலாந்து நாட்டின் இளம் ராணுவ சிப்பாயொருவர், எதிரிநாட்டுக்கு உளவு பார்ப்பதாக முறைப்பாடு எழுந்தது.
இதன்பேரில் ராணுவ உளவுப்பிரிவில் பணிபுரிந்து வந்த ராணுவ வந்த அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அப்போது அவர் கடந்த 2020-ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்து சேவையாற்றி வந்ததும், அப்போது ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது.
அந்த ரஷ்ய பெண் மூலமாக நியூசிலாந்து நாட்டின் ராணுவ ரகசியங்கள் மற்றும் முக்கிய தளவாட அமைப்புகள் அமைந்துள்ள இடங்கள் குறித்து ரஷியாவுக்கு தகவல்களை கசியவிட்டது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு 7 முதல் 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரியவருகின்றது.