நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என கட்சி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இருந்து விரைவில் நீக்கப்படுவார் என வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்தும பண்டார இவ்வாறு கூறியுள்ளார்.
“ ராஜித ஐக்கிய மக்கள் சக்தியில் தற்போது அங்கம் எந்தப் பயனும் இல்லை” எனவும் கூறியுள்ளார்.
ராஜித சேனாரத்ன விரைவில் அரசுடன் இணைவாரென தெரியவருகின்றது.
