லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: சொகுசு வீடுகளைக் காக்க கோடீஸ்வரர்கள் லட்சக்கணக்கில் செலவழிப்பு

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீயிலிருந்த தங்களது சொகுசு வீடுகளை பாதுகாக்க அங்குள்ள கோடீஸ்வரர்கள், லட்சக்கணக்கில் செலவழித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருகிறது.

இந்த காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகின்றது.

இந்நிலையில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் நீடிப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும், பள்ளத்தாக்கு பகுதிகளில் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் தீ பரவும் இடங்களில் விமானம் மூலம் வானில் இருந்து தீ தடுப்பு மருந்து வீசப்பட்டும் வருகிறது.

இந்த காட்டூத்தீயின் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய அளவிலான கட்டிடங்கள் நாசமாகியுள்ளன.

இந்நிலையில் தங்களது சொகுசு வீடுகளைப் பாதுகாக்க கோடீஸ்வரர்கள், லட்சக்கணக்கில் செலவழித்து தனியார் தீயணைப்புப் படையினரை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.

தங்கள் வீடுகளைப் பாதுகாக்க அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு 2 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலவழிக்கின்றனர். சொகுசு வீடுகள் மீது தனியார் தீயணைப்பு படையினர் அடிக்கடி தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீ பிடிக்காதவாறு பாதுகாக்கின்றனர்.

Related Articles

Latest Articles