வடக்குக்கு சார்ள்ஸ் – கிழக்குக்கு செந்தில் – புதிய ஆளுநர்களாக நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் புதிய மூன்று ஆளுநர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம் சார்ள்சும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்‌ஷமன் யாப்பா அபேவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பி.எஸ்.எம் சார்ள்ஸ் அரச நிர்வாக சேவையில் தேர்ச்சி பெற்ற அதிகாரி. அரச அதிபர், வடக்கு மாகாண ஆளுநர், சுங்க திணைக்கள பணிப்பாளர், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் என முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில், ஊவா மாகாண சபையில் அமைச்சராகவும், பதில் முதல்வராகவும் செயற்பட்ட அனுபவம் கொண்டவர்.

லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன முன்னாள் பிரதி நிதி அமைச்சர். மாகாண சபையிலும் பதவிகளை வகித்துள்ளார். தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தம்பியே லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன.

Related Articles

Latest Articles