தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேசன் வட்டகொட பகுதியில் வடிகாணில் இருந்து பச்சிளம் சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீதி ஊடாக சென்ற சிலர், சிசுவை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் சிசு லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த சிசு உயிருடன் இருப்பதாக வைத்திய சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிசு தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணைகளை தளவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
கௌசல்யா










