‘வயது மூப்பின் காரணமாகவே முற்போக்கு கூட்டணியின் செயலர் பதவி விலகினாராம்’

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர் வயது மூப்பின் காரணமாகப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுயமாக விலகியுள்ளார் என்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைபேறு மற்றும் வளர்ச்சிக்கு கணிசமாகப் பங்களித்துள்ள சாப்டரின் இடை விலகலை நாம் கனத்த இதயத்துடன் புரிந்துகொள்கின்றோம்” என்றும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

கூட்டணியின் அரசியல் குழு விரைவில் கூடி, கூட்டணி யாப்புக்கு இணங்க புதிய பொதுச்செயலாளரைத் தெரிவு செய்யும் என்றும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles