வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று – வடக்கு, கிழக்கில் போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இன்றைய நீதி கோரிய ஜனநாயகப் போராட்டங்களுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தினம் இன்று (ஆகஸ்ட் 30) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதையொட்டி எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரிய ஜனநாயகப் போராட்டங்கள் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும் நீதி கோரிய போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சமூக அமைப்புக்களால் இன்று முற்பகல் 9.00 மணிக்கு கல்லடிப் பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை நடைபவனியாக இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கான முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தமிழரசுக் கட்சி வழங்குகின்றது. இன்றைய தினம் உணர்வுபூர்வமான எமது உரிமைப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்துக்குப் பலம் சேர்க்குமாறு உரிமையோடு எமது உறவுகளின் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles