வவுனியாவில் கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்பு

வவுனியா, நெடுங்கேணி – கிரிசுட்டான் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட் டுள்ளது. அந்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந் தையான 47 வயதுடைய வேத நாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மேற்படி நபரின் மனைவியான 37 வயதுடைய லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அயலில் உள்ள வீட்டில் இருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும், அண்மைக்காலமாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்திருந்தனர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இருவரின் சடலங்களும் வவுனியா பொது வைத்தியசலைக்குக் கொண்டுவரப் பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை நெடுங் கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின் றனர்.

Related Articles

Latest Articles