வாகன இறக்குமதி தடையை நீக்குவதற்கு அவதானம் –அஜித் நிவர்ட் கப்ரால்

வாகனங்கள் உட்பட பெரும்பாலான இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வர்த்தக சபை ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய அவர், அந்நிய செலாவணியைப் பொறுத்து இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்க முடியும் என கூறினார்.

மேலும் இலங்கை தற்போது வெற்றிகரமாக தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் மீண்டும் சுற்றுலாத் துறை தொடங்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles