நாட்டில் ஏழு மாதங்களுக்குள் வாகன விபத்துகளால் ஆயிரத்து 192 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையில் நாட்டில் ஆயிரத்து 126 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சாரதிகளின் கவனமின்மையே விபத்துகளுக்கான பிரதான காரணியாக அமைந்துள்ளது.
நாட்டில் கடந்த 3 நாட்களுக்குள் நடைபெற்ற வாகன விபத்துகளில் 15 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.










