வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 74 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை வெலிகபொல பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடை பியதாஸ என்பவரே இவ்வாறு உயிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை பலாங்கொடை பிரதான வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சத்தியா முன்னிலையில் இடம் பெற்றது.
இதன் போது அவர் உட்கொண்ட வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதன் காரணமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
பிரதான சட்ட வைத்தியர முன்னிலையில் சாட்சியமளித்த உயிரிழந்தவரின் மனைவி,
“ உயிரிழந்த தனது கணவர் உணவு உட்கொண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிட்டார் அது அவரின் தொண்டையில் சிக்கியதன் காரணமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.” என தெரிவித்துள்ளார்.
எம்.எப்;.எம். அலி