விசேட அதிகாரங்களுடன் 16 ஆம் திகதி ஆளுநராக பதவியேற்கிறார் கப்ரால்!

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், எதிர்வரும் 16 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்பார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்காக மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த பேராசிரியர் டபிள்யூ.டி லக்‌ஷ்மன் நேற்று பதவி துறந்தார். அத்துடன், அஜித் நிவாட் கப்ராலும் நிதி இராஜாங்க அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை விரைவில் துறைக்கவுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ள அஜித் நிவாட் கப்ராலுக்காக விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், கப்ராலால் முன்வைக்கப்பட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றும் விதத்திலேயே குறித்த அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

அத்துடன், சில விசேட அதிகாரங்களும் மத்திய வங்கி ஆளுநருக்கு வழங்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles