தேதிமுக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சலுக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் திடீரென்று அவருக்கு நுரையீரலில் தொற்றும் ஏற்பட்டது. சளியும் அதிகரித்தது. இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறினார்.
இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.