விபத்தில் தங்கை பலி – அக்கா படுகாயம்! திருமலையில் சோகம்!!

திருகோணமலை,புல்மோட்டை பிரதான வீதி கும்புறுபிட்டி பகுதியில் இன்று காலை இடம் பெற்ற விபத்தில் தாதியரொருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்திய சாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி (44வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும், பவுசரும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் தாதி உத்தியோகத்தரும், ஆசிரியையும் கடமைக்காக சென்று கொண்டிருந்தபோதே விபத்து இடம்பெற்றுள்ளது.

தாதியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது அக்காவான ஆசிரியை படுகாயமடைந்துள்ளார்.

குறித்த ஆசிரியை குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles