‘விருந்து வைத்த தவிசாளர் உள்ளிட்ட எழுவரும் குடும்பத்தோடு தனிமை’

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி விருந்துபசாரம் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தலவாக்கலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்த தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தற்காலிக தலைவர் பாரதிதாசன் உட்பட ஏழு பேர் இன்று பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் வீடுகளிலேயே சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அது தொடர்பான அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் ஜுலை 13 ஆம் திகதி இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு தலவாக்கலை பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

தலவாக்கலை பகுதியிலுள்ள திருமண மண்டபமொன்றில் விருந்துபசாரம் நடத்திய தவிசாளரும், 6 வர்த்தகர்களும் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles